Tuesday 22 March 2016

கூகுள் நீக்கிய ஆண்ட்ராய்ட் புரோகிராம்கள்

கூகுள் ப்ளே ஸ்டோரில், ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் கூடுதல் வசதிகளைத் தரக்கூடிய பல புரோகிராம்கள் ஆயிரக்கணக்கில் கிடைக்கின்றன. இவை, கூகுள் ஆண்ட்ராய்ட் பிரிவின் அனுமதி பெற்றே, கூகுள் ப்ளே ஸ்டோரில் இடம் பெற்றாலும், பல அப்ளிகேஷன் புரோகிராம்கள், பயனாளர்களின் போன்களைத் தங்கள் நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதாகவும், தீங்கு விளைவிப்பதாகவும்
மற்றும் பெர்சனல் தகவல்களைத் திருடுபவையாகவும் உள்ளன. இது பற்றி தெரியவருகையில், கூகுள் அவற்றை ஆய்வு செய்து, தன் கூகுள் ப்ளே ஸ்டோர் தளத்திலிருந்து நீக்குகிறது.
அண்மையில் இது போல 13 ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள் நீக்கப்பட்டன. ஸ்மார்ட் போன்கள் இயக்கப் பாதுகாப்பு குறித்துத் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வரும் கிறிஸ், இந்த புரோகிராம்கள் பாதுகாப்பற்றவை. திருட்டுத்தனமாக செயல்படுகின்றன என்று கண்டறிந்து, கூகுள் நிறுவனத்திற்கு அறிவித்தார்.
இந்த புரோகிராம்கள், பயனாளர்களுக்குத் தெரியாமல், அவர்களின் ஆண்ட்ராய்ட் போனில் பல புரோகிராம்களைத் தேவையற்ற வகையில் பதிக்கின்றன. இந்த போன்கள் பிரச்னைக்குள்ளாகும்போது, அவற்றை “தயாரித்து வெளியிட்ட நிலைக்கு” மீண்டும் அமைத்தாலும் (Factory Default), இந்த புரோகிராம்கள் அழியாமல் போனில் தங்குகின்றன.
அண்மையில், கூகுள் நிறுவனம் நீக்கிய புரோகிராம்கள் பின்வருமாறு: Honeycomb, Just Fire, Cake Blast, Crazy Block, Drag Box, Tiny Puzzle, Jump Planet, Ninja Hook, Piggy Jump, Eat Bubble, Hit Planet, Cake Tower, மற்றும் Crazy Jelly.
பயனாளர்கள் யாரேனும், இவற்றைத் தங்களின் போனில் பதிந்திருந்தால், உடனே நீக்கிவிடவும். அத்துடன், போனைத் தயாரித்து அளித்த நிறுவனத்தின், ரீட் ஒன்லி மெமரியையும், புதிதாக அமைக்க வேண்டும்.
சென்ற ஆண்டு, Shedun என்ற பெயர் கொண்ட அப்ளிகேஷன் புரோகிராம் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டது. பயனாளர்களுக்குத் தெரியாமல், இது பல அப்ளிகேஷன் புரோகிராம்களை போனில் பதிந்தது தெரியவந்தது. இதே போல பாதிக்கப்பட்ட மற்ற மொபைல் போன்களுடன் இந்த புரோகிராம்கள் தகவல்களைப் பகிர்ந்து வந்ததும் கண்டறியப்பட்டது. பின்னர், இந்த புரோகிராமும், அது பதிந்த மற்ற புரோகிராம்களும் நீக்கப்பட்டன.

No comments:

Post a Comment