Friday, 24 June 2016

அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில சட்ட பிரிவுகள்



1, ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)
2, நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை. IPC-217
3, நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம். CRPC 404
4, அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166
5, எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.
6, சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம். Article 19(1) , CRPC 303,302(2)
7, வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.
8, இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ்
எவர் ஒருவரும் பார்வையிடலாம்.
9, இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43
10, ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. CRPC 36, 149.
11, காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் இவற்றிலிரிந்து யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம். செலவு ஐந்து ரூபாய் மட்டுமே. Article 21(2)
12, கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு எத்தனை வருடம் நடந்தாலும் செலவுத்தொகை ரூபாய் 50 லிருந்து 100 வரை மட்டுமே பெறலாம். அதீதமான சூழ்நிலையில்தான் வழக்குச் செலவு கூடும். பொய்வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன்படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும். மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் 50,000 நஷ்ட ஈடு பிரதிவாதிக்கு தரவேண்டும்.
13, தாலுக்கா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற செலவு ரூபாய் 25 மட்டுமே. அதற்காக RIOffice-லும் VAO ஆபீசிலும் தவம்கிடந்து காத்திருக்க வேண்டியதில்லை.
14, காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம். CRPC.160(2)
15, அதீதமான சூழ்நிலையில் மட்டும் கைவிலங்கிட முடியும் மற்றப்படி அன்று Article 21(14)
16. புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் Article 32(8)
17, பொய் வழக்கில் சிறைதண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம்.
18, பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் உண்மையைப்போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC 193,196,200.
19, முத்திரையே இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு. IPC.267
20, அடுத்தவருடைய அசையும் சொத்தை பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு..IPC-403
21, குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல் மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் பத்து வருட சிறை தண்டனை உண்டு.IPC-315.
22, தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை. IPC-96
23, பிற மதம் நிந்தித்தல் ஆச்சாரம் கெடுதல் 2 ஆண்டு சிறை. IPC-295
24, மத உணர்வுகளை புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை IPC-295
25, ஆள்மாராட்டம் செய்து ஏமாற்றுதல். 3 ஆண்டு சிறை IPC-419
26, ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7வருடம் சிறை. IPC-468.
27, சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3ஆண்டு சிறை IPC-484
28, கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தல் 7 ஆண்டுகள் சிறை. IPC-494
29, முந்தைய திருமணம் மறைத்தல் 10 வருடம் சிறை. IPC-495
30, IPC-499 ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட
இதில்
IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)ஆகும்.
CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம் ஆகும்.

Thursday, 23 June 2016

சாட்சி கையெழுத்து போட்டால் பிரச்னை வருமா?

 இதனைப்பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், "கேரண்டி கையெழுத்து" (ஜாமீன்) மற்றும் "சாட்சி கையெழுத்து" என்ற இருவகைகளை அறிந்து கொண்டால் மிக இலகுவாக நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

 
         ”சாட்சி கையெழுத்து என்பது எந்த ஒரு ஆவணத்திலும் கையெழுத்து இட்டதற்கு சாட்சியாக இரண்டு நபர்களை கையெழுத்து போட வைப்பதுதான். அதாவது, அந் த ஆவணத்தில் கையெழுத்து போட் டவர் இந்த நபர்தான் என்பதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் போடும் கையெழுத்துதான் சாட்சி கையெழுத்து. உயில், தானம் போன்ற ஆவணங்களில் சாட்சி கையெழுத்து அவசியம்

வங்கியில் கடன் வாங்கும்போது கேரன்டி கையெழுத்து கேட்பார்கள். கேரன்டி கையெழுத்து என்பது கடன் வாங்கும் நபர் கடனை திரும்பச் செலுத்தவில்லை எனில் கேரன்டி கையெழுத்து போட்டவர் தான் அந்த கடனை திரும்பச் செலு த்த கடமைப்பட்டவர் ஆவார். நேரடியாக கடன் வாங்கிய நபரை அணுகாமல் கேரண்டி கையெழுத்து போட்டவரிடமே கடனை கேட்க வங்கிக்கு உரிமை உண்டு. அந்த கடனில் அவருக்கும் பங்குண்டு என்பதே கேரண்டி கையெழுத்தின் சாராம்சம்.
கேரண்டி கையெழுத்துக்கும், சாட்சி கையெழுத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக் கிறது. ஆவணத்தில் தனக்கு முன்பாக அதை எழுதிக் கொடுத்தவர் கையப்பமிட்டார் என்பதற்கு ஆதாரம்தான் சாட்சிக் கையெழுத்து. அதற்கு மட்டுமே சாட்சி பயன்படுவார். தவிர, அந்த ஆவணத்தில் இருக்கும் மற்ற விஷயங்களுக்கு சாட்சி கையெழுத்து போட்டவர் பொறுப்பாக மாட்டார். சாட்சி கையெழுத்து போடும்போது அந்த ஆவண த்தில் இருக்கும் சங்கதிகள் அல்லது தகவல்கள் சாட்சி கையெழுத்து போடும் நபருக்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது ஆவண த்தின் தன்மை, உரிமை மாற்றம் என எதுவாக இருந்தாலும் அதை சாட்சி தெரிந்து கொள்ள, தெரிந்திருக்க வேண்டிய அவசிய மில்லை. (நெருங்கிய உறவினர் தயாரித்த ஆவண த்தில் கையெழுத்து போடுகையில் விதி விலக்கு உண்டு)
சாட்சி கையெழுத்து போடுபவருக்கு என்ன சிக்கல்வரும்? நில அபகரிப்பு மோசடி வழக்கு தொடுக்கபடும் போது, இந்த நிலத்தை நான் விற்கவில்லை இந்த கையெழுத்து என்னுடையது இல் லை என அந்த நிலத்தை விற்ற நபர்கள் சொல்லும்போது. அல்லது பு ரோநோட்டை எழுதி கொடுத்தவர் அ தில் உள்ள கையெழு த்தை மறுக்கும் போது அந்த ஆவணத்தில் சாட்சி கையெழுத்து போட்ட நபர்களை நீதி மன்றம் விசாரணைக்கு வரச் சொல்லும். இந்த இடத்தில்தான் சாட்சி கை யெழுத்து போடும் நபருக்கு பொறுப்பு வருகிறது. அந்த ஆவணத்தில் கையெழுத்து போட்டது இவர்தான் என சாட்சி கையெழுத்து போட்ட நபர் சொல்லும் சாட்சிதான் மிக முக்கியமாக கருதப்படும். இந்த நேரத்தில் மட்டும்தான் சாட்சி கையெழுத்து போட்டவர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படுவார்.
நன்கு தெரிந்தவர் உங்களிடம் கேட்டுக் கொண்டால் ஒழிய, முன்பின் தெரியாதவர்களுக்கு சாட்சி கையெழுத்து போட வேண்டாம். சிலர் நூறு அல்லது இருநூறு கொடுப்பதாகவும் ஆசை காட்டுவார்கள். பணத்திற்காக ஆசைப்பட்டு யார் யாருக்கோ கையெழுத்து போட்டால் பிற் பாடு நீதிமன்றத்தின் படிகளை அடிக்கடி ஏற வேண்டியிருக்கும்!

Thursday, 16 June 2016

வீடு கட்ட அனுமதி பெறுவது எப்படி?

சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்றால் நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். வீட்டுக் கடனைத் தாண்டி வீடு கட்ட அங்கீகாரம், திட்டத்துக்கு ஒப்புதல் என நிறைய அனுமதி பெற வேண்டியிருக்கும். வீடு கட்ட அனுமதி வாங்க எங்கே, எப்படி அணுக வேண்டும் என்று பார்ப்போம்.


புதிதாக வீடு கட்ட வேண்டும் என்றாலும், ஏற்கெனவே கட்டப்பட்ட வீட்டில் கூடுதலாகக் கட்டடங்களைக் கட்டுவதாக இருந்தாலும் அதற்குத் திட்ட அனுமதி பெற வேண்டும்? இந்த திட்ட அனுமதியை எங்கே வாங்குவது? இந்த அனுமதியைச் சென்னை நகர எல்லைக்குள் இருந்தால் பெரு நகர வளர்ச்சிக் குழுமத்திடமும் (சிஎம்டிஎ), சென்னை அல்லாத தமிழகத்தின் பிற பகுதிகள் என்றால் நகரத் திட்ட இயக்ககம் (டிடிசிபி) அமைப்புகளிடம் அனுமதி வாங்க வேண்டும்.

வீடு கட்டுவதற்கான அனுமதி பெறுவதில் என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்று தெரியுமா? வீடு அல்லது வர்த்தக் கட்டிடங்கள் எதுவாக இருந்தாலும் திட்ட வரைபடம் தேவை. இதை லே-அவுட் என்று சொல்வார்கள். இந்த லே-அவுட் சி.எம்.டி.ஏ. அல்லது டிடீசிபியால் வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். வீடு கட்ட விண்ணப்பிக்கும்போது வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைப்படி லே-அவுட் இருக்கிறதா என்பதை அதிகாரிகள் நேரில் வந்து மனையை ஆய்வு செய்வார்கள்.


இந்தத் திட்ட வரைபடமானது முழுமையாக விதிமுறைகளுக்கு உட்பட்டு இருந்தால்தான் திட்ட அனுமதி கிடைக்கும். அப்படி இல்லையென்றால் அந்தத் திட்ட வரைபடத்துக்கான அனுமதியை சிஎம்டிஏ அல்லது டிடிசிபி வழங்காது. சென்னையில் வீடு அல்லது கட்டடம் கட்ட வேண்டும் என்றால் சென்னை எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ. அலுவலகம் செல்ல வேண்டும். அங்கு மட்டுமே திட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்க முடியும். மற்ற பகுதிகள் என்றால் டிடிசிபியின் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும். டிடிசிபி அலுவலகம் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் செயல்பட்டுவருகின்றன. .


யார் விண்ணப்பிக்க வேண்டும் என்ற சந்தேகம் இப்போது உங்களுக்கு வரலாம். நிலம் அல்லது மனையின் உரிமையாளர் அல்லது குத்தகைதாரர் ஆகியோர் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியைக் கோரி விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பம், அதற்கென வரையறுக்கப்பட்ட படிவத்தில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். சிஎம்டிஏ அல்லது டிடிசிபி அலுவலகங்களில் அனுமதி கோரும் இந்த விண்ணப்பப் படிவங்கள் ஏ, பி, சி என மூன்று வகைகளில் இருக்கும்.


விண்ணப்பம் ஏ என்பது வீடு கட்டும் மனைப்பிரிவுக்கான விண்ணப்பம். இந்த விண்ணப்பத்தை வழங்கும்போது மனைக்குரிய எல்லா ஆவணங்களையும் இணைக்க வேண்டும். மனையை வாங்கும்போதே சிஎம்டிஏ அல்லது டிடிசிபி அமைப்பின் அங்கீகர வீட்டு மனையாக இருந்தால் பெரும்பாலும் எந்தச் சிக்கலும் வராது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.


விண்ணப்பம் பி என்பது கட்டிடம் கட்டுவதற்கும், ஏற்கெனவே கட்டப்பட்ட கட்டடங்களுடன் சேர்த்து புதிய கட்டிடங்களைக் கட்டுவதற்கு உரியது. வீட்டை விரிவாக்கம் செய்வதாக இருந்தாலும் இந்த விண்ணப்பத்தை வழங்க வேண்டும். கட்டிடத்தின் திட்ட வரைபடத்தை இணைக்க வேண்டும். வீட்டைச் சுற்றி 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் விவரங்கள் ஆகியவற்றையும் முழுமையாகக் குறிப்பிட வேண்டும்.


விண்ணப்பம் சி என்பது மிகப் பெரிய அளவில் கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் தொகுப்புக் கட்டிடங்களுக்கு உரியது. இந்த விண்ணப்பம் சிறப்பு அந்தஸ்து உள்ளது என்பதால், இந்த வகை கட்டடங்களுக்கு சிஎம்டிஏ அமைப்பின் உறுப்பினர் செயலரின் அங்கீகாரம் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டும் கட்டுநர்கள் இந்த விண்ணப்பத்தைத்தான் வழங்குவார்கள்.


இந்த விண்ணப்பங்களை வழங்கினால் மட்டும் போதாது. திட்ட அனுமதி மற்றும் விண்ணப்பத்தோடு உறுதி மொழிப் படிவத்தையும் கண்டிப்பாக இணைக்கச் சொல்வார்கள். உறுதிமொழி அளிப்பதற்கான மாதிரி படிவமும் சிஎம்டிஏ அமைப்பால் வரையறுக்கப்பட்டுள்ளது. பல உறுதிமொழிகள் அதில் இடம் பெற்றிருக்கும். குறிப்பாக அனுமதியை மீறிக் கட்டடம் கட்டினால் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் குறிப்பிட்டு கையொப்பம் கேட்கப்பட்டிருக்கும். விண்ணப்பங்கள் சிஎம்டிஏ அல்லது டிடிசிபி அலுவலகங்களில் கிடைக்கும். தற்போது இந்தப் படிவங்களை சிஎம்டிஏ மற்றும் டிடிசிபியின் இணையதளங்களிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் வந்துவிட்டது.

வீடு கட்டுவதற்கு அனுமதி கோரி பெரும்பாலும் விண்ணப்பம் பி-யே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த விண்ணப்பத்துடன் உரிமையாளர் கையொப்பம், குத்தகைதாரரின் கையொப்பம், அங்கீகாரம் பெற்ற நில அளவையர் கையொப்பம், வீட்டைக் கட்டும் பொறியாளரின் கையெழுத்து, கட்டடம் கட்டுவதற்கான திட்ட வரைபடம் ஆகியவற்றைக் கண்டிப்பாக இணைக்க வேண்டும்.

தரைத்தளத்துடன் மூன்று மாடிச் சிறப்புக் கட்டிடம், நான்கு அடுக்குக்கு மேல் உள்ள கட்டிடங்கள் என்றால் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். கட்டிடங்கள் கட்டுவதற்கு சிடிஎம்ஏ அல்லது டிடீசிபியின் அனுமதி வாங்குவதோடு வேலை முடிந்துவிடாது. கட்டுமானப் பணி நடைபெற்று கொண்டிருக்கும்போது ஒவ்வொரு நிலையிலும் விதிமுறைப்படி வீடு ஒழுங்காகக் கட்டப்படுகிறதா எனக் கண்காணிப்பார்கள். விதிமுறையை மீறாமல் வீட்டைக் கட்டுவது வீட்டு உரிமையாளரின் பொறுப்பும்கூட!

Wednesday, 8 June 2016

கோயில்களில் திருமணம் செய்து கொள்வதால் கிடைக்கும் பயன்கள்

கோயிலில் திருமணம் செய்து கொள்வதால் கூடுதல் நற்பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால் தற்போதைய அவசரச் சூழலில், கோயிலில் திருமணம் மேற்கொள்வது குறைந்து வருகிறது.
ஒரு சிலருக்கு கோயிலில் திருமணம் செய்து வைத்தால்தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
பொதுவாகவே வழிபாட்டுத் தலங்களில் வைத்துக் கொள்வது நல்லது. வாழ்க்கைத் துணையை ஆலயத்தில் ஏற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது. அதற்காகத்தான் பண்டைய காலங்களில் கோயில்களை எழுப்பிய மன்னர்கள் பல நூற்றுக்கணக்கானோர் அமரும் வகையில் ஆயிரம்கால் மண்டபங்களையும் கட்டி வைத்தனர்.
 
மன்னர் காலத்தில் கணவன்-மனைவி பிரிவு என்பது மிகவும் அபூர்வமான நிகழ்வாக இருந்தது. தலைமுறைகள் மாற்றத்தினால் பிரிவு அதிகரித்துள்ளது என்று சிலர் கூறினாலும், அந்தக் காலத்தில் இறைவனை சாட்சியாகக் கொண்டு வாழ்க்கைத் துணை ஏற்றுக் கொண்டவர்கள், பிரிவதற்கு யோசிப்பர். அதற்கு காரணம் இறைவன் மீதுள்ள பக்தி, பயம்.
மேலும், கோயிலில் வழிபாட்டுத் தலங்களில் எப்போதும் மந்திரங்கள் ஜபித்தல், ஸ்லோகங்கள் ஓதுதல், இறைவனைப் பற்றிய பாடல்கள், தெய்வீக நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதால் எப்போதும் நேர்மறைக் கதிர்கள் அங்கு இருக்கும். எனவே அங்கு மாங்கல்யம் சூட்டிக் கொள்வது சிறப்பான பலன்களைத் தரும்.

காரணம் ஏதும் தெரியாமல் நாம் பின்பற்றும் சில பழக்கவழக்கங்கள்!!

நாம் சிறு வயதில் இருந்து ஒருசில விஷயங்களை காரணம் தெரியாமல் பின்பற்றி வருவோம். ஆனால் வளர்ந்த பின் பலரும் அந்த விஷயங்கள் ஓர் மூடநம்பிக்கை என்று உணர்வோம். இன்றும் பல மதங்களில் ஒருசில விஷயங்களை நம் முன்னோர் பின்பற்றினர் என்று தவறாமல் பின்பற்றுவோம்.
அப்படி இந்தியாவில் நிறைய மூடநம்பிக்கைகள் தினமும் மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் என்னவென்று கேட்டால், அப்படி செய்தால் தீங்கு விளையும் என்று நம் தாய் கூறியிருப்பதைக் கூறுவோம்.
ஆனால் அதற்கு பின் இருக்கும் உண்மையான காரணத்தைக் கேட்டால், இத்தனை நாட்கள் காரணம் தெரியாமல் பின்பற்றியுள்ளோமே என்று நினைப்போம். இங்கு அப்படி இந்தியாவில் காரணம் தெரியாமல் பின்பற்றி வரும் சில மூடநம்பிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.
எலுமிச்சை மற்றும் பச்சை மிளகாயை நூலில் கட்டி தொங்கவிடுதல்
பொதுவாக வண்டிகளில் மற்றும் வீட்டின் முன்புறம் எலுமிச்சை, பச்சைமிளகாயை நூலில் கட்டித் தொங்கவிடுவார்கள். இதற்கு காரணமாக வீட்டினுள் கெட்ட சக்தி நுழையாமல் இருக்கும் என்று காரணத்தை சொல்வார்கள்.
ஆனால் உண்மையில், இப்படி செய்வதன் மூலம் காட்டன் நூலானது பச்சை மிளகாய் மற்றும் எலுமிச்சையின் உள்ள வாசனையை உறிஞ்சி, வீட்டினுள் கொசுக்கள் மற்றும் இதர பூச்சிகள் நுழைய விடாமல் சிறந்த பூச்சிக்கொல்லியாக இருக்கும் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. Show Thumbnail
உடைந்த கண்ணாடியை வீட்டில் பயன்படுத்தக்கூடாது
இதன் உண்மையான காரணத்தைக் கேட்டால், நீங்கள் உண்மையிலேயே அதிர்ச்சி அடைவீர்கள். அது என்னவெனில், கண்ணாடியின் விலை அக்காலத்தில் அதிகம். எனவே கவனக்குறைவைத் தவிர்க்க,
நம் முன்னோர்கள் உடைந்த கண்ணாடி வீட்டிற்கு ஆகாது என்று கூறி, இன்று வரை பலரது வீட்டிலும் கண்ணாடி பத்திரமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. என்ன சரி தானே! உங்கள் வீட்டிலும் நீங்கள் கண்ணாடியை மிகவும் கவனமாகத் தானே வைத்திருக்கிறீர்கள்.
மாலையில் நகம் வெட்டக்கூடாது
பொதுவாக மாலை நேரத்தில் அதுவும் 6 மணிக்கு மேல் நகம் வெட்டக்கூடாது என்று கூறுவார்கள் என்பதால் காலங்காலமாக நாமும் அதைப் பின்பற்றுகிறோம். ஆனால் இதன் பின்னணியில் உள்ள உண்மைக் காரணம், மாலையில் வெளிச்சம் அதிகம் இருக்காது. குறிப்பாக அக்காலத்தில் எல்லாம் மின்சார விளக்குகள் இல்லை.
மண்ணெண்ணை விளக்குகள் இருந்ததால், இந்நேரத்தில் நகத்தை வெட்டினால் காயங்கள் நேரும். ஆனால் இந்த காரணத்தைக் கூறினால் யாரும் பின்பற்றமாட்டார்கள். ஆகவே மாலை நேரத்தில் நகத்தை வெட்டுவது நல்லதல்ல என்று கூறி, நம்மை பின்பற்ற வைத்துவிட்டார்கள் நம் முன்னோர்கள்.
கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் வெளியே வரக்கூடாது
கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் வெளியே செல்லக்கூடாது என்று பலர் சொல்வதைக் கேட்டு, இன்றும் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். அதற்கு காரணம் கிரகணத்தின் போது சூரியனிமிருந்து வெளிவரும் புறஊதாக்கதிர்கள் மிகவும் கடுமையாக இருப்பதால், இந்நேரத்தில் கர்ப்பிணிகள் வெளியே சென்றால் அதனால் வயிற்றில் வளரும் கருவிற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தான்.
6 மணிக்கு மேல் வீட்டை பெருக்கக்கூடாது
இன்று பலரும் 6 மணிக்கு மேல் வீட்டைப் பெருக்கமாட்டார்கள். ஏன் என்று கேட்டால், வீட்டிற்கு லட்சுமி வரும் நேரம் என்று கூறுவார்கள்.
ஆனால் உண்மையில், அக்காலத்தில் 6 மணிக்கு மேல் வீட்டில் வெளிச்சம் குறைவாக இருப்பதால், தரையில் என்ன பொருட்கள் உள்ளது என்று சரியாக தெரியாது என்பதால் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.
செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டுவது
பழங்காலம் முதலாக செவ்வாய் கிழமைகளில் மட்டும் முடி வெட்டுவதைத் தவிர்ப்பார்கள். ஆனால் காரணம் என்னவென்று கேட்டால் யாருக்கும் தெரியாது. இருப்பினும் இன்று வரை செவ்வாய் கிழமைகளில் மக்கள் முடி வெட்டுவதைத் தவிர்த்து வருகிறார்கள்.