1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க..
2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம்,
சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்எனவீட்டின்ஒவ்வொரு கட்டுமானஅம்சத்திலும் நம்ஆலோசனை மற்றும்கண்காணிப்புஇருக்குமாறு பார்த்துக்கொள்வது,
வீட்டின் குவாலிட்டியைக்கூட்டும்.
தண்ணீர் :
3.. தண்ணீரின் தரம் மிகமுக்கியம். அதிக உப்புஉள்ள தண்ணீரில்வீடு கட்டினால், கட்டுமானம்மெள்ள மெள்ள அரிமானத்துக்கு உள்ளாகும். அதற்காககுடிநீரில்வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம்உப்பில்லாமல்இருப்பது அவசியம்.
4. தண்ணீர் தேவைகளுக்காகஆழ்துளைக்கிணறு அமைத்து, நீர்மூழ்கிமோட்டார்களைத் தேர்ந்தெடுக்கும்போதுசிலவிக்ஷயங்களில்உஷாராக இருக்கவேண்டும்.தண்ணீர்கொஞ்சம் கூடஉட்புகவாய்ப்பில்லாதமோட்டார்பம்புகளையேதேர்ந்தெடுக்க வேண்டும்.அப்போதுதான் மின்கசிவால்பிரச்சனைஇருக்காது.
5. இப்போதெல்லாம் அதிகபடியானவெப்பத்தைத்தாக்குப் பிடிக்கும்மோட்டார்கள்மார்க்கெட்டில் உள்ளன. வெப்பம் அதிகமாகிவிட்டது என்பதைஉணர்த்தும்அலாரம்பொருத்தப்பட்டமோட்டார்களைப்பொருத்திவிட்டால் அடிக்கடி ரிப்பேர்ஆவதுதடுக்கப்படும்.
6. வெப்பத்தை உணர்ந்து மின்இணைப்பைதானேதுண்டித்து விடும் வகையிலானஏற்பாடுடைய மோட்டார்களைப்பொருத்துவதுபுத்திசாலித்தனம்.
சிமெண்ட் :
7. தரமான சிமெண்ட்டால்தான் வலுவானகட்டடத்தை உறுதி செய்யமுடியும்.அந்தத்தரத்தை சிமெண்டின்நிறத்தைப்பார்த்தேஓரளவு யூகித்துவிடமுடியும்.லேசானபசுமை நிறத்தில்இருப்பதுநல்லசிமெண்ட்.
8. மூட்டைக்குள் இருக்கும்சிமெண்ட்டுக்குள்கையைவிடும்போதுசிலுசிலுவென்று குளுமையாகஇருக்க வேண்டும். தண்ணீர்இருக்கும்வாளிக்குள்சிமெண்ட்டைப் போடும்போது அதுமிதந்தால் தரத்தில்கோளாறானதுஎன்றுஅர்த்தம். அதேபோல்தட்டிஇருந்தாலும்தரமற்றது.
9. சிமெண்ட் மூட்டையின் அளவு50 கிலோஇருக்கவேண்டும். எடைவேறுபாடு ஒருகிலோவரைஅனுமதிக்கலாம். அதற்கு மேல்போனால், உரியவகையில்விசாரித்துஒழுங்கானஅளவுள்ளமூட்டைகளைப் பெறுவதற்கானமுயற்சிகளில் இறங்குங்கள்.
மணல் :
10. மணலில் அதிக தூசுதுரும்புஇல்லாமல்இருக்க வேண்டும். அதிகஅளவுவண்டல் கலந்திருந்தால்அதன்நிறமேகாட்டிக் கொடுத்துவிடும்.
11. மணலின் மொத்த எடையில்8% வண்டல்இருந்தால்பயன்படுத்தலாம்.பார்வையாலேயே இதைக் கண்டுபிடித்துவிடமுடியும். அதற்கு மேல்இருந்தால்பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
12. கடல் மணலைக் கொடுத்துஏமாற்றும்வேலைகள்நடக்கின்றன. அந்த மணலைக்கொஞ்சம் வாயில்எடுத்துப் போட, உப்புக்கரித்தால்அது கடல்மணல். இந்தமணலைபயன்படுத்திக்கட்டப்படும் சுவர்கள்பெரும்பாலும் ஈரமாகவே இருக்கும். சீக்கிரம்உதிர்ந்துவிடும். மழை பெய்தால்சீக்கிரம்அரித்துவிடும். ஆகையால். கடல்மணலுக்குகண்டிப்பாக நோசொல்லிவிடுங்கள்.
13. மணலில் தவிடு போல்நொறுங்கிப்போகக்கூடிய சிலிக்கா
அதிகம் இருந்தாலும் பயன்படுத்தக்கூடாது.ஏனென்றால், இதுசிமென்ட்டுடனானபிணைப்பைஉறுதியாகஉருவாக்காது.
இரும்புக் கம்பிகள் :
14. கான்கிரீட்டுக்கு வலு சேர்க்கஇரும்புக்கம்பிகள்பயன்படுத்தப்படுகின்றன. இதற்குஎந்தவகைஇரும்புகளைப்பயன்படுத்தினாலும் சிலவிஷயங்களைக்கவனத்தில்கொள்ளவேண்டும்.
15. ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்டுவரும்கம்பிகள், பட்டைகள், சட்டங்கள், சுருள்கள்போன்றவற்றில்சிறுபிசிறுகள்இருக்கக்கூடும். இவற்றை அகற்றியபின்னரே பயன்படுத்தவேண்டும்.
16. இரும்பின் மேல் கொஞ்சம்கூடதுருஇருக்கக் கூடாது. அடையாளங்களுக்காகசிறு அளவில் பெயிண்ட்தடவப்பட்டாலும்நீக்கிவிட வேண்டும்.எண்ணெய், அழுக்கு, பிசுக்கு, சேறு, மண்,மணல்போன்ற எந்தவித அசுத்தமும்இருக்கக்கூடாது. அப்படி இருந்தால்பிணைப்புவலுவில்லாமல்போய்விடக் கூடும்.
செங்கல் :
17. வீட்டின் உறுதியைநிர்ணயிப்பதில்செங்கற்களுக்கு பிரதானஇடம் உண்டு. பாரம்பரியமுறையிலானசூளைமற்றும் நவீனமுறையிலான சேம்பர்எனஇரண்டுவகையில்செங்கற்கள்தயாரிக்கப்படுகின்றன. இரண்டுதயாரிப்புகளையுமேவாங்கிப்பயன்படுத்தலாம்.
18. செங்கல் தரமானதாகஇருக்கிறதாஎன்பதைக் கண்டறியநாலைந்துசெங்கற்களைஎடுத்து 24 மணி நேரம் நீரில்ஊறப்போடவேண்டும். பிறகு, விரலால்சுரண்டிப்பாருங்கள் பிசிறுபிசிறாகவந்தால்தரம் குறைவானசெங்கல்என்றுஅர்த்தம்.
19. இப்போதெல்லாம் ‘இன்டர்லாக்செங்கல்கள்’ என்றொருவகையும்பயன்பாட்டில் இருக்கிறது. நிலக்கரிசாம்பல், சுண்ணாம்பு, ஜிப்சம்கலந்துதயாரிக்கப்படும் இந்தக் கல் ஒன்றின்விலை16 முதல் 20 ரூபாய் வரைநிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் கல், மூன்றுசெங்கற்களுக்குஇணையானது.வேலையைச்சுலபமாக்கும்.
20. கட்டுமானப் பொருட்களின்சேதாரத்தைகுறையுங்கள். கொண்டுவரும்போதோ, கையாளும்போதோ,பயன்படுத்தும்போதோஆகும்சேதாரத்தில்மட்டும் 5 சதவீதகட்டுமானப்பொருட்கள் வீணாகிவிடும். நீங்கள்களத்தில்இருந்தால்தான் இந்த சேதாரத்தைகண்காணிக்க முடியும். அலுவலகத்திற்குவிடுமுறை போட்டால் லாஸ் ஆஃப்பேஆயிற்றேஎன நீங்கள்கணக்குப்போட்டால்இங்கு அதைவிடஅதிகஅளவுபொருட்கள் நட்டமாகும்.
21. கான்ட்ராக்டரிடம் வேலையைஒப்படைக்கும்போது அவரதுமுந்தையவேலைகள், அவருக்கும், அவரதுதொழிலாளர்களுக்கும் இடையேஉள்ளநல்லுறவு, அவரதுவளைந்துகொடுக்கும்தன்மை, எல்லாவற்றையும்விடநேர்மைஆகியவற்றை விசாரியுங்கள்.
22. மூலப் பொருட்களை ஒரேயடியாகவாங்கிஸ்டாக்வைத்துக் கொள்வதுதவறு.கட்டுநர்களுக்குஇது சரியானது. ஆனால்,முன்கூட்டியேஒரு பெரியஅளவிலானகட்டுமானப்பொருட்களை வாங்குவதன்மூலம்நமதுபணம் மறைமுகமாகஒரேஇடத்தில்முடக்கப்படுகிறது.
23. அதே சமயம் அவ்வப்போதுபொருட்களைவாங்கினால், அன்றன்றைய சந்தைநிலவரம்பொறுத்துதான்நாம் பொருட்களைவாங்கமுடியும். இதற்கு என்னவழி? முன்கூட்டியே,பின் தேதியிட்டகாசோலைகளைடீலர்களிடம்கொடுத்துவிட்டு, அந்தந்ததேதியில்தேவையான பொருட்களைஇன்றையமார்க்கெட் விலைக்கு இறக்கும்படிஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள்.
24. சமீபத்திய தொழிற்நுட்பங்களையும், நவீனகட்டுமானப் பொருட்களையும்பயன்படுத்துவதன்மூலம் நேரமும்கூலியும்மிச்சமாகும்.
25. செங்கற்களுக்கு மாற்றாகவந்துள்ளகட்டுமானக் கற்களைபயன்படுத்தலாம். இது விலையும்குறைவு,சேதாரமும்குறைவாகும்.
26. மர வேலைகள் நமதுகட்டுமானச் செலவைபெரிதும் கபளீகரம் செய்யக்கூடியவை. எங்கள்வீட்டுவாசற்கதவு மட்டுமே1 லட்ச ரூபாய்ஆனதுஎனஎத்தனைநாள்சொல்லிக்கொண்டிருப்பீர்கள்?.குறைந்தபட்சம் கிரகப்பிரவேசநாளில்இருந்து10 நாட்கள் சொல்லப் போகிறீர்கள்.அதற்கு ஏன்1 லட்ச ரூபாய்ஃபீஸ் தரவேண்டும்?.
27. எல்லா வேலைகளுக்கும்மரத்தையேநாடாமல், UPVC மற்றும் அலுமினியஜன்னல் கதவுகளைப்பயன்படுத்துங்கள். மரலுக்கினைத்தரும் ஸ்டீல்கதவுகளைக் கூடநாம்பயன்படுத்தலாம்.
28. பரண் அமையும் இடத்தில்அதனுடையதொடர்ச்சியாகசுவற்றின்வெளிப்புறத்தில்சன்க்ஷேடுகளைஅமைத்தால் செலவு குறையும்.
29. ஆற்று மணலை வெளியில்ஒரு வாரகாலம்போட்டுவைத்து, பின்புஅதனை கசடுகள்நீக்கி,சலித்துபயன்படுத்துவதற்கு பதில்,நன்றாகபேக் செய்யப்பட்டM.சேண்டைபூச்சுவேலைக்குப் பயன்படுத்தலாம்.சென்னை போன்றநகரங்களில்வசிப்பவர்களுக்கு ஆற்றுமணலைவிட M.சேண்ட்விலைகுறைவானதுஎன்பதுகுறிப்பிடத்தக்கது.
30. க்ஷட்டரிங் பிளைவுட் கொண்டுசென்ட்ரிங்செய்யும் பட்சத்தில், சீலிங் பூச்சுவேலைமுற்றிலும்தவிர்க்கலாம். இதன் மூலம் 1000சதுர அடிகட்டிடத்தில் ரூ.30,000 வரைமிச்சப்படுத்தலாம்.
31. எந்த வேலைக்கு, எந்தஅளவிலானகம்பிஎன்பதை பொஷூயாளர்மூலமாகபார்பென்டருக்கு உணர்த்திவிடுங்கள்.பொதுவாகஅஸ்திவாரம், பில்லர்கள், தளங்கள்இந்த வேலைகளின்போதுதான்பொறியாளர்களின்பேச்சைபார்பென்டர்கள்கேட்கிறார்கள். ஸ்லாபுபோன்ற மற்ற வேலைகளுக்குஅதிகஅளவில்கம்பிகள் செலவாவதைநாம்தடுக்கவேண்டும்.
32. முடிந்த அளவு மறுசுழற்சிப்பொருட்களைபயன்படுத்தமுன்வர வேண்டும். பழையபொருட்களாயிற்றேஎன்ற தயக்கத்தைநீங்கள்களைந்தால், கணிசமான அளவுபணத்தைமிச்சம்செய்யலாம்.
33. உங்களது புராஜெக்டு நடத்தும்இடத்தைச்சுற்றிவலுவான காவலைஏற்படுத்திக்கொள்ளுங்கள். இன்றைய நிலையில்கட்டுமானப்பொருட்களைவிட காஸ்ட்லியானதுஎதுவுமில்லை.
34. தேவையற்ற பார்ட்டீசியன்சுவர்களுக்குஅதிக கனமுடையசுவர்களைஅமைக்காதீர்கள்.
35. கட்டுமானப்பணி முடியும் வரை, செங்கல்,சிமெண்ட், ரசாயனங்கள் போன்ற கட்டுமானப்பொருட்களை கவனமாகக்கையாளுங்கள்.
36. செலவானாலும் பரவாயில்லைஎன்றுதரமிக்க மின்கேபிள்கள், மின்சாதனங்களையே வாங்குங்கள். இதுஒன்டைம்இன்வெஸ்ட்மென்ட்தான். இதற்குப்பிறகுஆகும் மின்செலவை இதுபெருமளவுகுறைக்கும்.
37. நான் பிராண்டட் பெயிண்ட்களைஉங்கள்கட்டுமானத்
திற்குப் பயன்படுத்தாதீர்கள். தரமற்றபெயிண்ட்கள் உங்கள்பர்ஸைசிக்கனப்படுத்தும். ஆனால்,கட்டிடத்தைநீண்டகாலம் பாதுகாக்காது.
38. வீட்டை சுற்றிலும் முறைப்படிஅளந்து,எல்லைகளைகவன
மாக வேலியிட்டு பாதுகாத்துக்கொள்வதுசிறந்தது.
39. சிமெண்ட் கட்டிட சாமான்கள், கருவிகள்இவற்றைபாதுகாக்க ஒருசிறியகுடோன்அமைப்பது நல்லது.
40. கட்டுமான பணிக்காக முதலில்குடிநீர்தொட்டிகட்டிக் கொள்வதுநல்லதுஅல்லதுசெப்டிக் டேங்க்கட்டி,கட்டிடவேலைக்கான நீர்தொட்டியாகபயன்படுத்திக்கொள்ளலாம்.
41. போர்வெல் போட்டு, மின்இணைப்புபெற்றபிறகு, கட்டிடவேலையைதுவங்குவதுவரவேற்கத்தக்கதாகும்.
42. அதி நவீன கட்டுமானநுட்பங்கள்,பொருட்களை பயன்படுத்திக் கொள்ளுதல்,மிகபிரபலமாகி வரும்ரெடிமிக்ஸ்கான்கிரீட்டுகள் போன்ற அதிநவீனகட்டுமானவசதிகளைபயன்படுத்திக்கொண்டால் கட்டுமானகாலம்,நேரம்குறையும்.
43. அஸ்திவாரம் போட மண்வெட்டிஎடுத்தஉடனேமண்ணின் தன்மைதரம்பற்றிபரிசோதித்து இந்த இடத்திற்கு ஏற்றஅஸ்திவாரமுறையைபொறியாளர்அறிவுரையுடன் முடிவு செய்யவேண்டும்.
44. பேஸ்மெண்ட் லெவல் கட்டிமுடித்தபிறகுசாலையின் உயரத்திற்கும், வீட்டின்உயரத்திற்கும்பொருத்தமான அளவில்கட்டிடத்தை உயர்த்த வேண்டும்.
45. லிண்டல் லெவல் வந்தபிறகு, போர்ட்டிகோ.சிட் அவுட், சன்க்ஷேஷட் பொருட்கள் வைக்க,சுவரின் பக்கவாட்டில்உயரத்தில்லக்கேஜ்லாஃப்ட், சுவற்றிற்குள்வைக்கக்கூடியஒயர்களுக்கு இட அமைப்புபற்றிபொறியாளருடன் ஓர் ஆய்வு செய்யவேண்டும்.
கீழ்க்கண்ட விவரங்களை தெரிந்துகொள்ளல்அவசியம்:
46. ரூஃப் லெவல் முடிந்தபிறகுஎலெக்ட்ரிக்ஸ்விட்ச் பாக்ஸ்அமைவிடங்கள்கண்ட்ரோல் பேனலுக்கு இடம் குறித்துஆய்வுஎதிர்காலத்தில்கூடுதலாகமின்வசதிதேவைப்பட்டால் அதற்கான ஸ்விட்ச்பாக்ஸ் அமைவிடங்கள்பற்றிய விவரங்கள்.
47. கதவு, நிலவு, ஜன்னல்கள்ஆகியவற்றிற்குத்தேவையான மரங்கள் அலுமினியஸ்டீல்கிரில்கள், ஃபர்னிச்சர் ஃபிட்டிங்ஸ்,பூட்டுகள், கைப்பிடிகள், அலமாரிகள், ரூம்தடுப்புகள், வெண்ட்டிலேட்டர் அமைப்புகள், உள்அலங்காரபொருட்களுக்கான அமைவிடங்கள்பற்றிய அனைத்து விவரங்கள்.
48. தளத்திற்கு மொசைக் மார்பிள்ஸ், செராமிக்டைல்ஸ், சுவரில் பதிக்கும்டைல்ஸ்,அலங்காரக்கூரை, ஓடுகள், பளபளக்கும்சமைலயறைப் பலகைகள், ஸ்டோர்ரேக்ஸ்பலகைகள் பற்றியவிவரங்கள்.
49. வண்ணப்பூச்சு உட்புறத்துக்குஏற்றவண்ணம்,வெளிச்சுவர்களுக்குரியவண்ணம்கேட்டிசைனில் இருக்கவேண்டும்.என்னவண்ணம் அடிக்கலாம்என்பதைப்பற்ஷூயவிவரங்கள்.
50. உள் அலங்கார அறையின்உள்அலங்காரஅமைப்பிலும் அந்த அறையின்தன்மைக்கேற்ப வண்ணமும், உள்அலங்காரமும்இருப்பது பற்றியவிபரங்கள்.